சபா மாநிலத்தில் உள்ள சுங்கை சிபுகா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான மூசா அமான் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து சபா மாநிலத்தில் யார் முதலமைச்சர் என்பதில் ஏற்பட்ட போராட்டத்தில் கடந்த மே 17-ஆம் தேதி நாட்டை விட்டே வெளியேறினார். அவர் இலண்டன் சென்று அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில்தான் அவர் தற்போது நாடு திரும்பியுள்ளார்.அவர்மீது செய்யப்பட்ட புகார்கள் தொடர்பிலும் அவர் காவல் துறையினரால் தேடப்படுகிறார்.