சிங்கப்பூர் – 1எம்டிபி நிறுவனம் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் முறைகேடாகப் பெறப்பட்ட பணத்தை மீட்டு மீண்டும் மலேசிய அரசாங்கத்திடம் செலுத்த சிங்கப்பூர் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டன.
இந்தப் பணத்தின் மதிப்பு சிங்கப்பூர் டாலர் 15.3 மில்லியனாகும். இந்தப் பணம் 1எம்டிபி பணத்தை மீட்பதற்காக கோலாலம்பூரில் இயங்கும் சிறப்பு வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
மேலும் மற்ற 1எம்டிபி சொத்துகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் நிறுவனமான டான் ராஜா & சியா (Tan Rajah & Cheah) சிங்கையிலிருந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சிங்கப்பூரின் இந்த நடவடிக்கையை மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் வரவேற்றுள்ளார்.