Home நாடு ஷாபி அப்துல்லா மீது 4 குற்றச்சாட்டுகள்

ஷாபி அப்துல்லா மீது 4 குற்றச்சாட்டுகள்

954
0
SHARE
Ad
Shafee Abdullah
முகமட் ஷாபி அப்துல்லா

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வழக்கறிஞருமான டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா மீது அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் கோர்ட்) 4 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும், தவறான தகவல்களைத் தந்ததற்காக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.

அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் மறுத்தார்.

சட்டவிரோதமான நடவடிக்கைக்காக 9.5 மில்லியன் ரிங்கிட் தொகையை இரண்டு தவணைகளில் அவர் பெற்றதாக முதல் இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் இருந்து இந்தப் பணம் இரண்டு தவணைகளில் ஷாபி அப்துல்லாவின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டன. 13 செப்டம்பர் 2013, 17 பிப்ரவரி 2014 ஆகிய இரு தேதிகளில் இந்தப் பணம் ஷாபி கணக்குக்கு மாற்றப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அம்லா (Anti-Money Laundering, Anti-Terrorism Financing and Proceeds of Unlawful Activities Act 2001) எனப்படும் கள்ளப்பணப் பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் ஷாபிக்கு அதிக பட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 மில்லியன் ரிங்கிட் வரையிலான அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அதே வேளையில் வருமான வரிச் சட்டம் 1967-இன் கீழ் நஜிப்பிடம் இருந்து பெற்ற வருமானத்தை 2015-ஆம் ஆண்டில் உள்நாட்டு வருமானவரி இலாகாவிடம் அவர் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஷாபி அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதத்தை எதிர்நோக்கலாம்.