Home Video 9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம்

9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம்

1038
0
SHARE
Ad

சென்னை – நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஷங்கர்-ரஜினி கூட்டணியின் “2.0” திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் இதுவரையில் யூடியூப் தளத்தில் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.

அந்த முன்னோட்டத்தின்படி விஞ்ஞான ரீதியான அச்சுறுத்தல் ஒன்று ஏற்படும் நிலையில் விஞ்ஞானி ரஜினி, அதனை முறியடிக்க சிட்டி என்ற செயற்கை மனிதனை (ரோபோ) மீண்டும் கொண்டு வரவேண்டும் என ஆலோசனை கூறுகிறார். சிட்டிக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து அவர் நடத்தும் அட்டகாசங்கள் காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice