Home உலகம் சூறாவளி : தென்சீனாவில் 3 மில்லியன் பேர் வெளியேற்றம்

சூறாவளி : தென்சீனாவில் 3 மில்லியன் பேர் வெளியேற்றம்

1064
0
SHARE
Ad
ஹாங்காங் – 600 சாலைகள் சூறாவளி காரணமாக மூடப்பட்டதால் இரயில் சேவைகள் நிலைகுத்தின

ஹாங்காங் – பிலிப்பைன்சில் கடும் சேதங்களை ஏற்படுத்திய ‘மங்குட்’ சூறாவளி ஹாங்காங்கிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு தற்போது வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.

இந்நிலையில் தென் சீனா பகுதியிலுள்ள 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை குவாங்டோங் வட்டாரத்தை மங்குட் சூறாவளி தாக்கியதில் நால்வர் மரணமடைந்தனர். குவாங்டோங் சீனாவின் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகையைக் கொண்ட வட்டாரமாகும்.

#TamilSchoolmychoice

ஹாங்காங்கில் மணிக்கு 173 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதைத் தொடர்ந்து தென் சீனாவிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹாங்காங்கைத் தாக்கிய சூறாவளியினால் கூரைகள் பறந்ததோடு, வானுயர்ந்த கட்டடங்களின் கண்ணடி ஜன்னல்கள் தெறித்து விழுந்தன. உயரமான கட்டடங்கள் ஆட்டங்கண்டதோடு, தாழ்வான பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டது. கடலலைகள் 9.8 அடி வரை உயர்ந்தன.