புத்ரா ஜெயா – போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலியானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களுக்கான தேதிகளை முடிவு செய்ய மலேசியத் தேர்தல் ஆணையம் நாளை வியாழக்கிழமை கூடுகிறது.
இதனை அறிவித்த தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ முகமட் எலியாஸ் அபு பாக்கார், நாளை நடைபெறும் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஓத்மான் மாஹ்முட் தலைமை வகிப்பார் என்றும் தெரிவித்தார்.
இடைத் தேர்தல்களுக்கான தேதிகள், வாக்காளர் பட்டியல், போன்ற விவகாரங்களை இந்தக் கூட்டம் விவாதித்து முடிவெடுக்கும்.
டேன்யல் பாலகோபால் அப்துல்லா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.