Home நாடு நஜிப் மீண்டும் கைது! நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

நஜிப் மீண்டும் கைது! நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

1174
0
SHARE
Ad

புத்ராஜெயா – இன்று புதன்கிழமை பிற்பகல் 4.13 மணியளவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் கைது செய்தது. அவரது சொந்த வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டது தொடர்பில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நஜிப் கைது செய்யப்பட்டார்.

நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்திற்கு (செஷன்ஸ் நீதிமன்றம்) நஜிப் கொண்டு வரப்பட்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் முறையாகத் சுமத்தப்படும்.