Home கலை உலகம் பிக்பாஸ் 2 : பாலாஜி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்! இன்னொருவர் யார்?

பிக்பாஸ் 2 : பாலாஜி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்! இன்னொருவர் யார்?

1525
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (22 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் நடிகர் பாலாஜி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட இந்த வாரம் ஜனனியைத் தவிர 5 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கிறார்.

வெளியேற்றப்பட எஞ்சியுள்ள 5 பேரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் மட்டும் இருவர் வெளியேற்றப்படுவர் என்றும் அதைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் அனைவரும் இறுதிச் சுற்று வரை நீடிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டிக்கிறது. இந்த வாரத்துக்குப் பின்னர் பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்படுவது இனியும் நீடிக்காது.

#TamilSchoolmychoice

இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில் முதல் ஆளாக பாலாஜி வெளியேற்றப்பட்டிருக்கிறார். மற்றொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படுவார்.