Home வணிகம்/தொழில் நுட்பம் பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சி குழுமம் 39 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது

பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சி குழுமம் 39 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது

786
0
SHARE
Ad

இலண்டன் – பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய தொலைக்காட்சி குழுமம் ஸ்கை (SKY) நிறுவனமாகும். பிரிட்டனின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசையான ஸ்கை நமது நாட்டிலும் அஸ்ட்ரோவில் 532 அலைவரிசையில் துல்லிய ஒளிபரப்பாக (எச்.டி) இயங்கி வருகிறது.

உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகளில் ஊடக நிறுவனங்களைக் கையகப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வரும் ரூபர்ட் மர்டோக் என்ற கோடீஸ்வருக்கு சொந்தமான ஸ்கை நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குடமையைக் கையகப்படுத்துவதில் பெரும் போட்டா போட்டி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கோம்காஸ்ட் என்ற நிறுவனம் (Comcast Corporation) 39 பில்லியன் அமெரிக்க டாலர் விலையில் (30 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்) ஸ்கை நிறுவனத்தை வாங்க பரிந்துரைத்துள்ளது.

ஸ்கை நிறுவனத்தை வாங்க அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனம், மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஃபோக்ஸ் நிறுவனம் (FOX) போன்ற மிகப் பெரிய ஊடக, தொலைத் தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டன. ஆனால், கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளிலேயே மிக அதிகத் தொகையைக் கொண்ட பரிந்துரையாக இருந்ததால் கோம்காஸ்ட் நிறுவனத்திற்கு ஸ்கை நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய ஸ்கை நிறுவன இயக்குநர் வாரியம் ஆதரவு வழங்கி, மற்ற பங்குதாரர்களுக்கும் சிபாரிசு செய்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து ஜரோப்பாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனம் தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கோம்காஸ்ட் நிறுவனம்