Home நாடு போர்ட்டிக்சன் : தேசிய முன்னணி போட்டியிடாமல் பின்வாங்கியது

போர்ட்டிக்சன் : தேசிய முன்னணி போட்டியிடாமல் பின்வாங்கியது

975
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அறிவித்த தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி போர்ட்டிக்சன் தொகுதி இடைத் தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கிறது, காரணம் இந்த இடைத் தேர்தல் வலுக்கட்டாயமாக, தனி நபர் ஒருவரின் அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தை தேசிய முன்னணி எதிர்க்கிறது என்றார்.

போர்ட்டிக்சனில் இடைத் தேர்தல் திணிக்கப்பட்ட விதம் ஜனநாயகத்துக்குப் புறம்பானது என்றும் அவர் மேலும் கூறினார்.

“நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் போன்ற இயற்கையான காரணங்களால் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம். ஆனால், இந்த இடைத் தேர்தல் தனி நபர் ஒருவரின் அரசியல் இலாபத்துக்காக திணிக்கப்பட்டிருக்கிறது” என இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில்  சாஹிட் தெரிவித்தார்.

2018 – பொதுத் தேர்தல் – போர்ட்டிக்சன் முடிவுகள்