Home நாடு செராஸ் தொகுதி தலைவர் அம்னோவிலிருந்து வெளியேறினார்

செராஸ் தொகுதி தலைவர் அம்னோவிலிருந்து வெளியேறினார்

738
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அம்னோ குறித்த பல விவகாரங்களில் பகிரங்கமாகவும், உரத்தும் குரல் கொடுத்து வந்தவர் செராஸ் அம்னோ தொகுதியின் தலைவர் டத்தோஸ்ரீ சைட் அலி அல்-ஹாப்ஷி (படம்).

ஆனால் ஆகக் கடைசியாக அம்னோவிலிருந்து வெளியேறும் தலைவராக அவர் திகழ்கிறார். “கனத்த இதயத்துடன் அம்னோவிலிருந்து வெளியேறுகிறேன்” என சைட் அலி அல்-ஹாப்ஷி இன்று திங்கட்கிழமை அறிவித்திருப்பதாக சினார் ஹரியான் மலாய் ஊடகம் அறிவித்திருக்கிறது.

கூட்டரசுப் பிரதேசத்தில் வாழும் மலாய் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சைட் அலி அல்-ஹாப்ஷி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து அடுத்தடுத்து பல தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்னோவிலிருந்து வெளியேறி வருகின்றனர்.