Home நாடு தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இராமநாதன் பெரியண்ணன்

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இராமநாதன் பெரியண்ணன்

1381
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கல்வி அமைச்சர் நியமித்த தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இந்தியர்கள் யாரும் நியமிக்கப்படாதது குறித்து இந்திய சமூகத்தில் பலத்த ஆட்சேபங்களும், கண்டனங்களும் எழுந்தன.

இந்நிலையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் (படம்) தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தை விரிவாக்கி மேலும் சிலரை உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

அவர்களில் இந்தியர்கள் சார்பாகவும், இந்தியர் கல்வி சார்பாகவும், இராமநாதன் பெரியண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.