கோலாலம்பூர் – நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதற்காக இன்று வியாழக்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் வந்தடைந்தார்.
நேற்று பிற்பகலில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆதரவாக சுமார் 50 பேர் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தின் முன்னால் திரண்டனர்.
இன்று காலையும் நீதிமன்ற வளாகத்தில் மலேசியா பாரு கண்காணிப்புக் குழுத் தலைவரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான டத்தோ லோக்மான் நூர் அடாம் தலைமையில் ஒரு குழுவினர் ரோஸ்மாவுக்கு ஆதரவாகத் திரண்டனர்.
இன்று தனக்கெதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றொரு வழக்கிற்காக நஜிப் துன் ரசாக்கும் நீதிமன்றம் வந்தடைவார்.
ரோஸ்மா மீது 17 குற்றச்சாட்டுகள் வரை சுமத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.