Home நாடு ரோஸ்மா மீது 17 குற்றச்சாட்டுகள்

ரோஸ்மா மீது 17 குற்றச்சாட்டுகள்

1072
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீது நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஏற்கனவே அவரது கணவர் நஜிப் மீது 32 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், ஒரு காலத்தில் உலகின் சக்திவாய்ந்த பிரதமர் தம்பதிகளாக உலா வந்த அவர்கள் இருவரும் இணைந்து தற்போது மொத்தம் 49 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்குகின்றனர்.

ரோஸ்மாவுக்கு 2 மில்லியன் ரிங்கிட் பிணை (ஜாமீன்), இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, நஜிப்புக்கு 4.5 மில்லியன் ரிங்கிட் பிணை அவரது வழக்குகளுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

தனது சொந்த வங்கிக் கணக்கில், 2013 முதல் 2017 வரை 7.1 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டது தொடர்பில் 12 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் ரோஸ்மா, அந்த பணம் தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது குறித்து தனது வருமானவரி கணக்குகளில் சமர்ப்பிக்கப்படாதது தொடர்பில் மேலும் 5 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கிறார்.