Home நாடு தந்தை விடுதலை! மகன் கைது!

தந்தை விடுதலை! மகன் கைது!

1609
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நேற்று வெள்ளிக்கிழமை காலையில் தாபோங் ஹாஜி நிதிவாரியத்தின் முன்னாள் தலைவரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் ரஹிம் 5 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவரது 24 வயது மகன் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்ட அப்துல் அசிசின் (படம்) மகன் விசாரணைக்குப் பின்னர் நேற்று நண்பகல் நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

அப்துல் அசிஸ் மீது எழுந்திருக்கும் ஊழல் புகார்களில் அவருக்கு பினாமியாக அவரது மகன் செயல்பட்டார் என்ற அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

குத்தகையாளர்களிடையே பெறப்பட்ட இலஞ்சப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய இடைத் தரகராக அவர் செயல்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்துல் அசிசின் மகன் இன்று காலை புத்ரா ஜெயா நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவரது தடுப்புக் காவலை நீட்டிக்கும் விண்ணப்பத்தை ஊழல் தடுப்பு ஆணையம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.