Home நாடு 9 நாட்களுக்குப் பின்னர் அப்துல் அசிஸ் விடுதலை

9 நாட்களுக்குப் பின்னர் அப்துல் அசிஸ் விடுதலை

1514
0
SHARE
Ad
Datuk-Abdul-Azeez-Abdul-Rahim
அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் – பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர்

புத்ரா ஜெயா- கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் 9 நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார்.

5 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகை மற்றும் இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

அவரை வரவேற்க சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் புத்ரா ஜெயா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் முன் திரண்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

அப்துல் அசிஸ், தபோங் ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அப்துல் அசிஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்துல் அசிஸ் சில அரசாங்கச் சலுகைகளைப் பெற்றுத் தர முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான நெருக்கத்தைப் பயன்படுத்தினார் என்ற அடிப்படையிலும், அவரது கடந்த கால வாழ்க்கை மற்றும் தொடர்புகள் குறித்தும் ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாகப் புலனாய்வு செய்வதாகவும் அவரது கைது தொடர்பில் ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த மே 23-ஆம் தேதி அசிசின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் ஊழல் தடுப்பு ஆணையம் 5 இலட்சம் ரிங்கிட் ரொக்கத்தையும், மேலும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பலநாட்டு அந்நிய நாணயங்களையும் கைப்பற்றியது.