ஸ்டாக்ஹோம் – சுவீடன் நாட்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசுகளின் வரிசையில் அமைதிக்கான பரிசை போர்களுக்கிடையிலும், ஆயுதப் போராட்டங்களுக்கிடையிலும் பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிராகப் போராடி வரும் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடி வரும் டெனிஸ் முக்வெஜ் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பிணை பிடிக்கப்பட்டு பாலியல் கொடுமைகள் அனுபவித்து, அந்தக் கொடுமைகளைப் பகிரங்கமாக உலகுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடியா மூராட் ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
