Home உலகம் “எங்கே இண்டர்போல் தலைவர்?” சீனாவிடம் கேள்வி!

“எங்கே இண்டர்போல் தலைவர்?” சீனாவிடம் கேள்வி!

1502
0
SHARE
Ad

லியோன் (பிரான்ஸ்) – அனைத்துலக அளவில் மற்ற நாடுகளில் யாராவது காணாமல் போய்விட்டால் அனைவரும் நாடுவது இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறையின் உதவியை! ஆனால் அந்த இண்டர்போல் காவல் துறையின் தலைவரே காணாமல் போய்விட்டால் எங்கே போய் தேடுவது?

இப்படித்தான் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறார்கள் இண்டர்போல் காவல் துறை பிரிவினர். பிரான்ஸ் நாட்டின் லியோன் என்ற நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இண்டர்போல் அமைப்பின் தலைவரும் சீனாவைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரியுமான மெங் ஹோங் வெய் கடந்த 10 நாட்களாகக் காணவில்லை என அவரது மனைவி புகார் கொடுத்திருப்பதைத் தொடர்ந்து பிரான்ஸ் காவல் துறையினர் தீவிரமாகப் புலனாய்வில் இறங்கியுள்ளனர்.

இண்டர்போல் அமைப்பின் செயலாளர் ஜர்கன் ஸ்டோக் சீனாவிடம் மெங் ஹோங் வெய் என்னவானார் என அதிகாரபூர்வமாகக் கேட்டுள்ளார். எனினும் இன்னும் அதற்கான விளக்கத்தை சீனா வழங்கவில்லை.

#TamilSchoolmychoice

சீனாவின் சார்பில் இண்டர்போல் தலைவரான முதல் அதிகாரி மெங் ஹோங் வெய் ஆவார்.

மெங் காணாமல் போன தருணத்தில் அவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் சீனாவில் இருந்தாரா என்பது குறித்த தகவல்களும் இல்லை.