இந்த விவகாரம் குறித்து வைரமுத்து மூடி மறைக்கிறார் என்றும் அவரது அலுவலகத்தில் உள்ள அவரது உதவியாளர்கள் அனைவருக்கும் இதுகுறித்துத் தெரியும் என்றும் சின்மயி சாடியிருக்கிறார்.
தொடர்ந்து அடுக்கடுக்காகப் பல்வேறு தகவல்களை தனது டுவிட்டர் தளத்தில் சின்மயி பதிவிட்டிருக்கிறார்.
“இனி எனக்கு பாடுவதற்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் உண்மையைக் கூறிவிட்டேன்” என்றும் சின்மயி தெரிவித்திருக்கிறார்.
சின்மயியின் டுவிட்டர் பதிவுகளைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் பதிவுகள் குவிந்து வருகின்றன. பிரபல்யத்துக்காக சின்மயி இவ்வாறு செய்கிறார் எனவும், நான்காண்டுகளுக்குப் பின்னர் ஏன் இப்போது மட்டும் இவ்வாறு முன்வந்து வைரமுத்து மீதான பாலியல் தொந்தரவுகளைப் பகிரங்கமாகக் கூறுகிறார் எனவும் ஒரு சில தரப்பினர் அவரைச் சாடுகின்றனர்.
ஆனால், இன்னொரு தரப்பினரோ, நான்காண்டுகளுக்குப் பிறகாவது சின்மயி தனது பாடும் வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை என இவ்வாறு முன்வந்து தனக்கு நேர்ந்ததைக் கூறியிருக்கிறாரே எனப் பாராட்டுகிறார்கள்.