Home கலை உலகம் பாடகி சின்மயி டுவிட்டர் தளத்தில் வைரமுத்து குறித்த பாலியல் புகார்கள்

பாடகி சின்மயி டுவிட்டர் தளத்தில் வைரமுத்து குறித்த பாலியல் புகார்கள்

1979
0
SHARE
Ad

சென்னை – தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் சில செய்திகள் பிரபல பின்னணிப் பாடகி சின்மயியின் டுவிட்டர் தளத்தில் தற்போது வெளியாகியிருக்கின்றன. பிரபல கவிஞரும் தமிழ்ப் படப் பாடலாசிரியருமான வைரமுத்து ஒரு சில பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற செய்திதான் அது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் வைரமுத்து மீது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.

அண்மையக் காலமாக தமிழ்த் திரையுலகிலும் இந்தியத் திரைப்பட உலகிலும் பாலியல் தொந்தரவுகளினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சனைகள் பகிரங்கப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டத்தில் பாடகி சின்மயி தீவிரமாகப் பாடுபட்டு வருகிறார். தனது டுவிட்டர் தளத்தில் “நானும்தான்” என்ற பொருளில் “மி டூ” என்ற இணைப்பின் மூலம் (#metoo – ஹேஷ்டேக்)  பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பெண்களின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

அந்தத் தளத்தில்தான் வைரமுத்து குறித்த புகார்களும் எழுப்பப்பட்டுள்ளன. சந்தியா மேனன் என்ற பெண்மணி பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு பெண் தெரிவித்திருக்கும் சம்பவத்தை அந்த டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதற்கு, வைரமுத்து தரப்பிலிருந்து இதுவரையில் பதில் அறிக்கையோ, மறுப்பறிக்கையோ வெளியிடப்படவில்லை.

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த டுவிட்டர் தளத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு:-