Home கலை உலகம் “உண்மையைக் காலம் சொல்லும்” – குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து பதில்

“உண்மையைக் காலம் சொல்லும்” – குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து பதில்

1068
0
SHARE
Ad

சென்னை – பாடகி சின்மயி உள்ளிட்ட சில பெண்கள் பகிரங்கமாகக் கூறிவரும் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவிப் பேரரசு வைரமுத்து இதுவரையில் பதில் எதவும் கூறாது மௌனம் காத்து வருகிறார்.

தனது டுவிட்டர் தளத்தில் மட்டும் பின்வருமாறு தனது பதிலை பதிவு செய்துள்ளார் வைரமுத்து:

“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்”

#TamilSchoolmychoice