Home நாடு மஇகா மத்திய செயலவை : 21 பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்

மஇகா மத்திய செயலவை : 21 பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்

1068
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் 21 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் 44 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

கடந்த கட்சித் தேர்தல்களில் 23 மத்திய செயலவை பதவிகளுக்கு போட்டி நடைபெற்றது. அதில் அதிக வாக்குகளைப் பெறும் முதல் 23 பேர் மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் 9 பேர் மத்திய செயலவைக்கு தேசியத் தலைவரால் நியமிக்கப்படுவர்.

இந்த முறை 21 பேர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ எம்.சரவணன், டான்ஸ்ரீ எம்.இராமசாமி ஆகிய இருவருக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

3 தேசிய உதவித் தலைவர் பதவிகளுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.