போர்ட்டிக்சன் – கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் மீதான தீவிரப் பிரச்சாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் ஒரு முடிவுக்கு வந்தன.
போர்ட்டிக்சன் தொகுதியிலிருந்து கொண்டு கடந்த இரண்டு வாரங்களாக சூறாவளிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் அன்வார். காலை 8.00 மணி தொடங்கி நள்ளிரவு வரை அவரது பிரச்சாரங்கள் தொடர்ந்தன.
அக்டோபர் 2-ஆம் தேதி கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும் மகாத்மா சிறப்புத் தபால் தலையை வெளியிடவும் மட்டுமே அன்வார் கோலாலம்பூர் வந்தார். மற்ற நாட்கள் போர்ட்டிக்சனிலேயே தங்கி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அன்வாரின் போர்ட்டிக்சன் பிரச்சாரங்களின் போது எடுக்கப்பட்ட சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:









