Home இந்தியா முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

1167
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான அவர் ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்.

2006 முதல் 2011 வரை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவரது தலைமையிலான தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர் பரிதி இளம்வழுதி. அதற்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் துணை சபாநாயகராகப் பதவி வகித்த அவர் பின்னர் 2013-ஆம் ஆண்டு திமுகவில் இருந்த விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுக கட்சிப் போராட்டத்தில் அவர் அண்மையக் காலமாக டிடிவி தினகரன் அணியில் இணைந்திருந்தார்.

#TamilSchoolmychoice

இன்று சனிக்கிழமை அதிகாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு அவரது இல்லத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். எனினும் மருத்துவமனை சென்றடைந்தபோது ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.