Home கலை உலகம் பெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்

பெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்

1357
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை தன்மீதான புகார்கள் அனைத்தும் பொய் எனவும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்றும் தனது டுவிட்டர் தளத்தில் காணொளி வழி கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்திருக்கும் நிலையில் இன்று இன்னொரு பெண்மணி “மீ டூ” (#Mee too) தளத்தில் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

தனது தோழி ஒருத்தியுடன் வைரமுத்து தகாத முறையில் நடந்து கொண்டார் என ஐஸ்வர்யா என்ற பெண் டுவிட்டர் தளத்தில் புகார் கூறியிருக்கிறார்.

தனது தோழி, வைரமுத்துவிடம் நினைவுக் கையெழுத்து (ஆட்டோகிராப்) வாங்க நெருங்கியதாகவும், அப்போது தனது தோழியின் கைத்தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்ட வைரமுத்து அன்றிரவே தனது தோழியை அழைத்து தான் எழுதிய காதலும் ஆபாசமும் கலந்த கவிதையைப் படித்துக் காட்டினார் என்றும் ஐஸ்வரியா என்ற அந்தப் பெண்மணி புகார் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனது தோழியின் தந்தை வயதுடைய நீங்கள் செய்த காரியத்திற்கு அவள் எந்த அளவுக்கு வருத்தப்பட்டாள். துயரமடைந்தாள் என்பது எனக்குத் தெரியும். காரணம் அப்போது நான் அவளுடன்தான் இருந்தேன். நீங்கள் அந்தக் கவிதையை மறந்திருக்கலாம். நான் நினைவுபடுத்துகிறேன். ‘உடுக்கையடி உன் இடுப்பு… எனத் தொடங்குவது அந்தக் கவிதை” எனவும் ஐஸ்வரியா என்ற அந்தப் பெண்மணி பதிவிட்டிருக்கிறார்.