Home வணிகம்/தொழில் நுட்பம் மைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்

மைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்

1174
0
SHARE
Ad
பால் அலென்

சான் பிரான்சிஸ்கோ – உலகின் மிகப் பெரிய மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்சுடன் இணைந்து 1970-ஆம் ஆண்டுகளில் தோற்றுவித்த பால் அலென் நேற்று திங்கட்கிழமை காலமானார்.

புற்று நோய் பாதிப்பால் மறைந்த பால் அலென் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராவார். அவருக்கு வயது 65.

9 வருடங்களுக்கு முன்னர் புற்றுநோய் பாதிப்பால் மீண்ட பால் எலென், தனக்கு மீண்டும் புற்று நோய் பீடித்திருப்பதாக பகிரங்கமாக அறிவித்த 2 வாரங்களுக்குள் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

போர்ப்ஸ் நிறுவனம் பால் அலென் 20.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளைக் கொண்டிருக்கிறார் என மதிப்பிட்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும், தகவல் தொழில் நுட்பத் துறைக்கும், சமூகத்திற்கும் பால் எலென் வழங்கியிருக்கும் பங்களிப்பு அளப்பரியது, ஈடிணையற்றது என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நதெல்லா அறிக்கை ஒன்றின் வழி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.