கணேஷ் 12 ஆயிரம் ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, அவரது அனைத்துலகக் கடப்பிதழும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஏற்கனவே, தொழில்நுட்பத் தொழிலாளி ஏ.மோகன்ராஜ் (வயது 41) என்பவரும், வாடகை வண்டி ஓட்டுநருமான எஸ்.சத்தியா என்பவரும் இதே வழக்கிற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி இந்த மூவரும் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் இவர்கள் மூவரும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஒரு இலட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே அவர்களுக்கு விதிக்கப்படலாம்.