76 வயதான அமிதாப் பச்சன் இதற்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 350 விவசாயிகளின் கடன்களை அடைக்க உதவிகள் செய்தார்.
பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என தொடர்ந்து திரையுலகில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமிதாப் தனது வலைத் தளத்தில் “850-க்கும் மேற்பட்ட கடன் தொல்லையால் அவதியுறும் விவசாயிகள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மொத்த கடன் தொகையான 5.5 கோடி ரூபாய் (அமெரிக்க டாலர் மதிப்பில் 748,000) விரைவில் வங்கிகளின் உதவியுடன் தீர்க்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Comments