“வைரமுத்து மீது இதுபோன்ற ஒரு தோற்றம் சினிமாத் துறையில் இருக்கிறது என்பதை அறிந்துள்ளேன். எனக்கு நேரடியாக இதுபோன்ற அனுபவங்கள் யாரிடமும் ஏற்பட்டதில்லை. நானும் என்னைப் பொறுத்த வரையில் கண்ணியமாக எல்லோரிடமும் நடந்து கொள்வேன். ஆனால், பல பெண்மணிகள் வைரமுத்து பற்றி என்னிடம் தெரிவித்திருக்கின்றனர். பலர் வைரமுத்துவிடம் இருந்து இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். இது அனைவருக்கும் தெரிந்த இரகசியம்” என பாடகியுமான ரெஹானா கூறியிருக்கிறார்.
சின்மயி குறித்தும் கருத்துரைத்த ரெஹானா, சின்மயி கூறுவதைத் தான் நம்புவதாகவும் ஆனால் அதே சமயத்தில் 15 ஆண்டுகள் கழித்து இதனைக் கூறுவதுதான் நெருடலாக இருப்பதாகவும், அதை அப்போதே வெளிக் கொணர்ந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரெஹானா பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் தாயாருமாவார்.