Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கை – ஈப்போ இடையில் ஏர் ஆசியா விமான சேவை

சிங்கை – ஈப்போ இடையில் ஏர் ஆசியா விமான சேவை

1248
0
SHARE
Ad

ஈப்போ – எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் ஈப்போவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகள் தொடங்குவதன் மூலம், அந்த இரு நகர்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்துக்கு நான்கு முறை இந்த சேவைகள் நடத்தப்படும். காலை 9.45 மணிக்கு சிங்கையிலிருந்து ஈப்போ வந்தடையும் ஏர் ஆசியா விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு ஈப்போவிலிருந்து சிங்கைக்குப் புறப்படும்.

திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இந்த விமான சேவைகள் நடத்தப்படும்.

#TamilSchoolmychoice

இந்தப் புதிய விமான சேவைகளைத் தொடர்ந்து ஈப்போவிலிருந்து மேலும் அதிகமான அனைத்துலக நகர்களுக்கு பயணத் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். உதாரணமாக, ஈப்போவிலிருந்து உலகின் மற்ற நாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்கள் இனி சிங்கை சென்று பின்னர் அங்கிருந்து சிங்கப்பூரின் விரிவான அனைத்துலகப் பயணங்களில் இணைந்து கொள்ள முடியும்.

இந்தப் புதிய பயணம் குறித்து கருத்துரைத்த பேராக் மாநில சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டான் கார் ஹிங், குறிப்பாக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாக ஈப்போவுக்கு விமான சேவைகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.