Home வணிகம்/தொழில் நுட்பம் 2019-இல் 24 புதிய கெண்டக்கி உணவகங்கள் திறக்கப்படும்

2019-இல் 24 புதிய கெண்டக்கி உணவகங்கள் திறக்கப்படும்

1285
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் இயங்கும் தொடர் விரைவு உணவகங்களில் அதிகமான கிளைகளுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவது கெண்டக்கி பிரைட் சிக்கன் உணவகங்களாகும். இந்த உணவகங்களை நடத்தி வருவது கியூ.எஸ்.ஆர் பிராண்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (QSR Brands (M) Holdings Bhd) நிறுவனமாகும்.

இந்த ஆண்டு 23 புதிய கெண்டக்கி உணவகங்களை வெற்றிகரமாகத் திறந்த கியூ.எஸ்.ஆர் பிராண்ட்ஸ் நிறுவனம் அடுத்த 2019-ஆம் ஆண்டில் 24 புதிய உணவகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப அதிகமான எண்ணிக்கையில் வாகனம் வழியாக விற்பனை செய்யும் உணவகங்களை (டிரைவ் இன்) திறக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது நாடு முழுமையிலும் 700 கெண்டக்கி உணவகங்கள் இயங்கி வருகின்றன.

புதிய உணவகங்களைத் திறப்பதில் புதிய வீடமைப்பு மேம்பாட்டாளர்களுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாகவும், கெண்டக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.