இஸ்தான்புல் – துருக்கியிலுள்ள சவுதி அரேபிய அரசாங்கத்தின் தூதரகத்தில் உள்ளே கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணம் குறித்து உண்மைகள் வெளிவர வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வருகிறார்.
“கொல்லப்பட்ட ஜமால் கஷோகியின் உடல் எங்கிருக்கிறது என சவுதி அரசாங்கம் கூற வேண்டும். கஷோகியின் உடலை ஒப்படைக்க வேண்டும். அத்துடன் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை சவுதி அரசாங்கம் ஒப்படைக்க வேண்டும்” என துருக்கியின் அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் அறைகூவல் விடுத்திருக்கிறார்.