Home கலை உலகம் பாலியல் புகார்கள் கர்நாடக இசை உலகை நோக்கியும் பாய்ந்தன

பாலியல் புகார்கள் கர்நாடக இசை உலகை நோக்கியும் பாய்ந்தன

853
0
SHARE
Ad

சென்னை – இந்தியாவை உலுக்கி வரும் #மீ டூ (#metoo) எனப்படும் பாலியல் புகார்களை பெண்கள் சமர்ப்பிக்கும் தளத்தின் பார்வை தற்போது கர்நாடக இசை உலகை நோக்கித் திரும்பியுள்ளது.

ஒரு சில இசைக் கலைஞர்கள் மீது கூறப்பட்ட பாலியல் புகார்களை பாடகி சின்மயி தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் இசைக் கச்சேரிகளில் பங்கேற்க முடியாது என 7 கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு சென்னை மியூசிக் அகாடமி தடை விதித்துள்ளது.

சென்னையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசைவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு அரங்கங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகள் களை கட்டும். இதைக் காணவும், கர்நாடக இசையில் திளைத்து மகிழவும் உலகம் எங்கிலும் இருந்து இரசிகர்கள் சென்னையில் திரளுவார்கள்.

#TamilSchoolmychoice

இந்த டிசம்பர் மாத இசைவிழாவில் பங்கேற்க பாலியல் புகார்கள் காரணமாக 7 இசைக் கலைஞர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.