Home Video ரஜினியின் ‘2.0’ – புதிய முன்னோட்டம் வெளியீடு

ரஜினியின் ‘2.0’ – புதிய முன்னோட்டம் வெளியீடு

1464
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி வெளியீடு காணவிருக்கும் ‘2.0’ படத்தின் புதிய முன்னோட்டம் இன்று சனிக்கிழமை சென்னை சத்யம் திரையரங்கில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

ரஜினிகாந்த், இந்தி நடிகர் அக்சய் குமார் இணைந்து மிரட்டும் இந்தப் படத்தின் முன்னோட்டத்தின்படி, எந்திரன் படத்தில் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் சாதாரண இயந்திரமாக வைக்கப்படும் சிட்டி என்ற ரோபோ இயந்திர மனிதனுக்கு மீண்டும் உயிரூட்டப்படுகிறது.

உலகம் எங்கும் உள்ள செல்பேசிகள் அனைத்தும் வில்லன் ஒருவனால் பறிமுதல் செய்யப்பட – அந்த வில்லனால் உருவாக்கப்பட்ட இராட்சத இயந்திரப் பறவை ஒன்றை முறியடிக்க விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) மீண்டும் சிட்டியை திரும்பக் கொண்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து வில்லனுக்கும் சிட்டிக்கும் இடையில் நடக்கும் பரபரப்பான போராட்டங்கள், மோதல்கள் அதிநவீன தொழில் நுட்பத்தில் ஆங்கிலப் படங்களுக்கு இணையாகப் படமாக்கப்பட்ட காட்சிகள் முன்னோட்டத்தில் விரிகின்றன.

இந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் தளத்தின் வழி காணலாம்: