Home உலகம் லயன் ஏர் : விமானத்தின் மையப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது

லயன் ஏர் : விமானத்தின் மையப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது

992
0
SHARE
Ad

ஜாகர்த்தா – ஜாவா கடல் பகுதியில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் மையப் பகுதியை கடலுக்கடியில் இந்தோனிசிய மீட்புப் படையின் முக்குளிப்புப் பிரிவினர் இன்று சனிக்கிழமை கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மையப் பகுதி விமானத்தை மீட்டு மேலே கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மீட்புப் படை ஈடுபட்டுள்ளது.

சுமார் 700 கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடல் பகுதியை முக்குளிப்பு வீரர்கள் கட்டம் கட்டமாக கடந்த ஒரு வாரமாகத் தேடி வந்தனர்.

இதுநாள் வரையில் மீட்புப் படையினர் விமானத்தின் பல பாகங்களையும், பல பயணிகளின் உடல் பாகங்களையும், உடமைகளையும் கண்டெடுத்துள்ளனர் எனினும் இதுவரையில் விமானத்தின் மையப் பகுதி கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது.