Home நாடு “பூர்வ குடியினருக்கு 100 மில்லியன் – முறையாக செலவிடப்படும்” – வேதமூர்த்தி

“பூர்வ குடியினருக்கு 100 மில்லியன் – முறையாக செலவிடப்படும்” – வேதமூர்த்தி

1184
0
SHARE
Ad

Waythamurthyகோலாலம்பூர் – வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நாட்டின் பூர்வ குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 100 மில்லியன் ரிங்கிட், அந்த மக்களின் மேம்பாட்டிற்காக, குறிப்பாக அவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என பிரதமர் துறை அமைச்சரான பி.வேதமூர்த்தி கூறினார்.

பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலப் பிரிவுகளுக்கான அமைச்சரான வேதமூர்த்தி, பூர்வ குடியினருக்கான மேம்பாட்டுக்கானப் பிரிவு 3 வாரங்களுக்கு முன்பாக தனது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தி பூர்வ குடியினரின் சமூகப் பொருளாதாரத்தை உயர்த்துவது குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் வேதமூர்த்தி கூறினார்.

இதற்காக கல்வியைத் தாங்கள் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படவிருப்பதாகவும் வேதமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பூர்வ குடியினருக்கான திட்டங்கள் அனைத்தும் முறைப்படி அமுலாக்கப்படவும், அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும் சரியான, விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

“எங்களின் கலந்துரையாடல்களின் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டது என்னவென்றால்,பூர்வ குடி மக்கள், தங்கிப் படிக்கும் பள்ளிகளுக்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, கல்வியை அவர்களுக்கு அருகாமைக்குக் கொண்டு வருவோம்” எனவும் வேதமூர்த்தி கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள தனது அலுவலகத்தில் பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் வேதமூர்த்தி இந்த விவரங்களை வெளியிட்டார்.

2019 வரவு செலவுத் திட்டம் மீதான அம்சங்கள் குறித்து கருத்துரைத்தபோதே வேதமூர்த்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பூர்வகுடியினருக்கான குடியிருப்புகளுக்கான சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட வேதமூர்த்தி, இதன் காரணமாக, அவர்களின் பிள்ளைகள் தூரத்திலுள்ள பள்ளிகளுக்குச் செல்வதிலும், மற்றவர்கள் வெளிவேலைகளுக்குச் செல்வதிலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவித்தார்.

பூர்வ குடியினரின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதார நிலையையும் மேம்படுத்த சம்பந்தப்பட்ட மற்ற அமைச்சுகளுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என்றும் வேதமூர்த்தி பெர்னாமாவுடனான நேர் காணலில் தெரிவித்தார்.