சபா மாநிலத்தில் வெட்டுமரக் குத்தகைகள் வழங்குவதில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற – 67 வயதான மூசா அமான், ஜாலான் டூத்தாவில் உள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குக் குற்றம் சாட்டப்படுவார் என ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுத் தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்ட மூசா அமான், அதன் பின்னர் சபா ஆளுநரை மிரட்டி முதலமைச்சராகப் பதவியேற்றார் என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். அப்போது நாட்டை விட்டு இரகசியமாக வெளியேறிய அவர் சில மாதங்களுக்குப் பின்னர் நாடு திரும்பினார்.