Home Video ஷாருக்கானின் ‘ஸீரோ’ முன்னோட்டம் – 4 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்

ஷாருக்கானின் ‘ஸீரோ’ முன்னோட்டம் – 4 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்

1136
0
SHARE
Ad

மும்பை – ஷாருக்கான் நடிப்பில் டிசம்பரில், கிறிஸ்துமஸ் பெருநாளின்போது வெளியாகவிருக்கும் ‘ஸீரோ’ (Zero) இந்திப் படத்தின் முன்னோட்டம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட 4 நாட்களிலேயே 83 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.

இதுதவிர, மற்ற சமூக ஊடகங்களையும் சேர்த்து முன்னோட்டம் வெளியிடப்பட்ட 4 நாட்களிலேயே அனைத்துத் தளங்களிலும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஸீரோ படம் ஈர்த்துள்ளது.

அபூர்வ சகோதரர்களில் கமல்ஹாசன் போட்டது போன்ற குள்ளமான மனிதர் வேடத்தை ஷாருக்கான் இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறார். அவருடன் அனுஷா சர்மா மற்றும் கத்ரினா கைப் இருவரும் இணைகிறார்கள்.

#TamilSchoolmychoice

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ரஞ்சனா இந்திப் படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஷாருக்கான் படம் வெளிவருவதாலும், அவரது குள்ளக் கதாபாத்திரம் இரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியிருப்பதாலும் படத்தின் முன்னோட்டம் மீதும் அதிகமான பார்வையாளர்களின் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-