கோலாலம்பூர் – நீதிமன்றத்தில் 45 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் அம்னோ தேசியத் தலஜோவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி அந்த வழக்கு முடியும்வரை தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அம்னோவின் பல தரப்புகள் தொடர்ந்து அவருக்கு நெருக்கடிகள் தந்து வருகின்றன.
ஆகக் கடைசியாக ஜோகூர் அம்னோவினர் ஊழல் வழக்கு முடியும் வரை சாஹிட் விடுமுறையில் செல்ல வேண்டும் என அவருக்கு நெருக்குதல் தந்துள்ளனர். ஜோகூர் அம்னோ தொகுதித் தலைவர்கள் இன்று சாஹிட்டுடன் சந்திப்பு நடத்தி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அதனை ஏற்காமல் தொடர்ந்து அம்னோ தேசியத் தலைவர் பதவியில் நீடிக்கப் போவதாக சாஹிட் வலியுறுத்தி வருகிறார்.