Home உலகம் பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஜோ ஜோன்சன் பதவி விலகினார்

பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஜோ ஜோன்சன் பதவி விலகினார்

918
0
SHARE
Ad

இலண்டன் – பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஜோ ஜோன்சன் (படம்) இன்று தனது பதவியிலிருந்து விலகினார். பிரெக்சிட் எனப்படும் (Brexit) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தில் பொதுமக்களுக்கு அவர்களின் முடிவுகளைத் தெரிவிக்கும் வண்ணம் புதிய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜோ ஜோன்சன், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இலண்டன் மேயருமான போரிஸ் ஜோன்சனின் இளைய சகோதரராவார்.

மற்ற அமைச்சர்களும் பிரெக்சிட் (BREXIT) விவகாரத்தில் தங்களின் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.