Home Video “லயன் கிங்” முன்னோட்டம் 26 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது

“லயன் கிங்” முன்னோட்டம் 26 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது

1510
0
SHARE
Ad

ஹாலிவுட் – 1994-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘லயன் கிங்’ ஆங்கிலப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒருசேரக் கவர்ந்த கார்ட்டூன் படமாகும்.

ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் காட்டு விலங்குகளின் வாழ்க்கையை மனித வாழ்க்கையைப் போல் காட்டப்பட்ட இந்தத் திரைப்படத்தில், தந்தை-தாய்-மகன் உறவு, நட்பு, குடும்பப் பகை, துரோகம் எனப் பல்வேறு அம்சங்கள் உணர்ச்சிகரமாகச் சித்தரிக்கப்பட்டு இரசிகர்களைக் கவர்ந்தது.

அந்தப் படம் மீண்டும் புதிய படமாக, அதே கதைப் பின்னணியோடு, நவீனமயமான புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டு மத்தியில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் குறுமுன்னோட்டம் (டீசர்) தற்போது வெளியிடப்பட்டு, ஒரே நாளில் 26 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தின் இந்திப் பதிப்பும் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில் தமிழிலும் வெளியிடப்படுமா என்பது இதுவரையில் தெரியவில்லை. பொதுவாக பிரம்மாண்டமான ஆங்கிலப் படங்கள் இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுவது வழக்கம்.

இந்திப் படத்தில் பிரபல இந்தி நடிகர் கபீர் பேடி, தந்தை சிங்கத்திற்காக குரல் கொடுத்திருக்கிறார்.

அந்தப் படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணையத் தள இணைப்பில் காணலாம்: