Home நாடு மனோன்மணி தேவியின் “சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும்” நூல் வெளியீடு

மனோன்மணி தேவியின் “சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும்” நூல் வெளியீடு

2623
0
SHARE
Ad
முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை

ஜோர்ஜ் டவுன் – முனைவர் மனோண்மணி தேவி அண்ணாமலை எழுதிய “சொற்புணர்ச்சி விதிகளும்
தொல்காப்பிய மரபும்” என்ற நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018-ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு பினாங்கு கொம்தார் கட்டடத்தில், 5-வது தளத்தில் எஃப் (F) அரங்கத்தில் நடைபெறுகிறது.

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (உப்சி) விரிவுரையாளராகவும், தமிழ்ப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றும் முனைவர் மனோன்மணி தேவியின் இந்த நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பதிப்பித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளரும் உமா பதிப்பகத்தின் நிறுவனருமான டத்தோ ஆ.சோதிநாதன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

மனோன்மணி தேவி அமரர் தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகம்மதுவின் மாணவியுமாவார்.

இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் திரளாகக் கலந்து சிறப்பிக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.