Home நாடு பினாங்கு மலேசிய தமிழ்க் கல்வி தேசிய மாநாடு தொடங்கியது

பினாங்கு மலேசிய தமிழ்க் கல்வி தேசிய மாநாடு தொடங்கியது

1327
0
SHARE
Ad
கல்வி அமைச்சரின் பிரதிநிதி டாக்டர் மணிமாறன் மாநாட்டைத் தொடக்கி வைத்து  கல்வி அமைச்சரின் உரையை வாசிக்கிறார்

பிறை – இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் சுமார் 300 பேர் கலந்து கொண்ட “மலேசிய தமிழக் கல்வி தேசிய மாநாடு” என்னும் தலைப்பிலான 2 நாள் மாநாடு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் சார்பில் அதிகாரபூர்வமாக திறப்பு விழா கண்டது.

மாநாட்டின் தொடக்க விழாவில் கல்வி அமைச்சரின் பிரதிநிதியும் கல்வி அமைச்சின் தொடர்புப் பிரிவின் தலைவருமான டாக்டர் ஜி.மணிமாறன் கலந்து கொண்டு கல்வி அமைச்சரின் அதிகாரபூர்வ உரையை வாசித்தார்.

மாநாட்டின் தொடக்கத்தில் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான சத்தீஸ் முனியாண்டி பேராளர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

வரவேற்புரையாற்றும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சத்தீஸ் முனியாண்டி
#TamilSchoolmychoice

கல்வி என்பது மத்திய அமைச்சுக்கும், கல்வி அமைச்சுக்கும் உட்பட்ட துறை என்றாலும், பினாங்கு மாநிலம் சீனம், தமிழ் ஆகிய தாய்மொழிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பினாங்கு அரசு எப்போதுமே பாடுபட்டு வந்துள்ளது என்பதை சத்தீஸ் முனியாண்டி தனது வரவேற்புரையில் சுட்டிக் காட்டினார்.

அந்த வகையில் தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்க நிலம் வழங்க முன்வந்த முதல் மாநிலம் பினாங்கு என்பதையும் சத்தீஸ் முனியாண்டி சுட்டிக் காட்டினார்.

இந்த மாநாட்டுக்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமிக்கு தனது நன்றியையும் சத்தீஸ் தெரிவித்துக் கொண்டார்.

பேராசிரியர் இராமசாமியும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

நாடெங்கிலும் இருந்து பல்வேறு கல்வியாளர்களும், நிபுணர்களும் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்கின்றனர்.