Home நாடு “மின்னியல் காலகட்டத்தில் தமிழ்க் கல்வி” – பினாங்கு தமிழ்க் கல்வி மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

“மின்னியல் காலகட்டத்தில் தமிழ்க் கல்வி” – பினாங்கு தமிழ்க் கல்வி மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

1058
0
SHARE
Ad
முத்து நெடுமாறன் – கோப்புப் படம்

பிறை – இங்குள்ள லைட் (Light) தங்கும் விடுதியில் இன்று திங்கட்கிழமை தொடங்கும் “மலேசியத் தமிழ்க் கல்வி தேசிய மாநாடு” என்னும் தலைப்பிலான இரண்டு நாள் மாநாட்டில் பிரபல கணினித் துறை நிபுணரும் முரசு அஞ்சல் மென்பொருள் உருவாக்குநரும், செல்லினம், செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் சிறப்புரை ஒன்றை நிகழ்த்துகிறார்.

முத்து நெடுமாறன் செல்லினம் செயலியின் தோற்றுநர் என்பதோடு, செல்லியல் இணைய ஊடகத்தின் இணை தோற்றுநருமாவார். “மின்னியல் காலகட்டத்தில் தமிழ்க் கல்வி” என்னும் தலைப்பில் அவர் இன்று திங்கட்கிழமை நடைபெறும் முதல் நாள் மாநாட்டில் பிற்பகலில் உரையாற்றுகிறார்.

நாடெங்கிலும் இருந்து கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் என சுமார் 300 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஆதரவில் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்) இந்த மாநாட்டை முன்னின்று ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டாம் நாள் மாநாட்டை இராமசாமி நிறைவு செய்து உரையாற்றுவார்.

பினாங்கு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகச் செயல்படுகிறார்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி முதன்மை உரையாற்றுகிறார்.