Home நாடு துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு”

துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு”

1260
0
SHARE
Ad

பிறை – இங்குள்ள லைட் (Light) தங்கும் விடுதியில் நாளை திங்கட்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு மலேசியத் தமிழ்க் கல்வி மாநாடு நடைபெறுகிறது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார் 300 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாட்டை, பினாங்கு மாநிலத்தின் முதலாம் துணை முதல்வர் அகமட் சக்கியுடின் அப்துல் ரஹ்மான் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

#TamilSchoolmychoice

தேசிய அளவில் தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை, எதிர்காலத்தில் தமிழ்க் கல்வியின் போக்கு எவ்வாறு அமைய வேண்டும், நவீனயுகத்தில் தமிழ்க் கல்வியை நடப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப எவ்வாறு கொண்டு செல்வது என்பது போன்ற அம்சங்களை “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு” விவாதிக்கும்.

கல்வித் துறை, தகவல் தொழில் நுட்பத் துறை என பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆய்வாளர்களும், அறிஞர்களும் இந்த மாநாட்டில் உரையாற்றி ஆய்வுக் கட்டுரைகள் படைக்கவிருக்கின்றனர்.

பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஆதரவில் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்) இந்த மாநாட்டை முன்னின்று ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டாம் நாள் மாநாட்டை இராமசாமி நிறைவு செய்து உரையாற்றுவார்.

பினாங்கு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகச் செயல்படுகிறார்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி முதன்மை உரையாற்றுகிறார்.

மாநாட்டின் விவாதங்களும், பரிந்துரைகளும் தொகுக்கப்பட்டு, ஏற்பாட்டுக் குழுவினரால் கல்வி அமைச்சின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் செல்பேசி எண்களை அழைத்து மேலும் விளக்கங்கள் பெறலாம்:

016-447 4738 அல்லது
010-563 2279