Home நாடு சீ பீல்ட்: நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள்

சீ பீல்ட்: நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள்

811
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் கோயில் இடமாற்றம் குறித்த கலவரத்தில், கோயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக நான்கு நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அவர்கள் நால்வரும், முகமட் ரிட்ஜுவான், வயது 26; இர்வான் நோர்டின், வயது 38; மொகமட் கைரி அப்துல் ரஷித் வயது 24; ரொகாய்சான் ஜமலூதின், வயது 38 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நவம்பர் 26-ம் தேதி பகல் 2 மணி முதல் 5 மணி வரை சுபாங் ஜெயாவில் உள்ள சீ பீல்ட் கோயில் வளாகத்தில் அவர்கள் இக்குற்றத்தினைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றத்தினை புரிந்ததால் அவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகால சிறைத் தண்டனையையும் அபராதமும் விதிக்கப்படலாம்.