Home நாடு இப்ராகிம் அலி கருத்து குறித்து, அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர் சாடல்

இப்ராகிம் அலி கருத்து குறித்து, அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர் சாடல்

1287
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலியின் உரை குறித்து அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர், ஷாரில் ஹம்டான் தமது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

பொதுவில் மலாய்க்காரர் மத்தியில் வேதமூர்த்தியின் மீது அதிருப்தி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்தியர்களையும் சாடி பேசுவது, இப்ராகிம் அலி, தம்மைத் தாமே பிரபலப்படுத்திக் கொள்ள முன்னெடுக்கப்படும் செயல் எனப் பதிவிட்டிருக்கிறார்.

வேதமூர்த்தியின் ஒரு சில கருத்துகளால் மலாய்க்காரர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை காரணமாகக் கொண்டு பிரதமரிடம் அமைச்சரவையில் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கச் சொல்வதை இனவாத செயலாக பார்ப்பதாக ஷாரில் கூறினார்.      

#TamilSchoolmychoice

தற்போது கூட வேதமூர்த்தியை பதவி விலகச் சொல்வதன் காரணம் அவரின் ஐசெர்ட் (ICERD) குறித்த நிலைப்பாடே தவிர, அவர் ஓர் இந்தியர் என்பதால் அல்ல என மலேசியாகினியிடம் ஷாரில் கூறினார்.