Home கலை உலகம் ‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகுவேன் – கமல்ஹாசன்

‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகுவேன் – கமல்ஹாசன்

877
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு மொழிகளில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன், 50 வருடத்திற்கும் மேலாக இந்திய திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் தம்மை படம் பிடித்துக் காட்டியுள்ளார் என்பது உண்மையே.

இரசிகர்களுக்கு அவ்வப்போது தமது சிறப்பான நடிப்பினை வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிக்கப்போவது அனைவரும் அறிந்த ஒன்று. இத்திரைப்படத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விடைபெறப் போவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலவருமான கமல்ஹாசன் அறிவித்தார். கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் அவர்மக்கள் நீதி மய்யம்எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

தமது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் தற்பொழுது மேற்கொண்டுள்ள அரசியல் பணிகளுக்கு இடையே இத்திரைப்படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறிய கமல், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தம் கட்சி போட்டியிடப் போவதையும் உறுதிப்படுத்தினார். இதனைக் கருத்தில் கொண்டு தாம் முழுநேரமாக அரசியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கமல் கூறினார்.

#TamilSchoolmychoice

தாம் திரையுலகிலிருந்து விலகியிருந்தாலும் தமது திரைப்பட தயாரிப்பு  நிறுவனம் தொடந்து சினிமாவில் தன் பங்கினை வகிக்கும் என கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு தெரிவித்தார்.

சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு இரசிகர்களிடம் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.