
பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதாகிய எம்சிடி பெர்ஹாட் (MCT Berhad) நிறுவனத்தின் மேம்பாட்டு இயக்குனர் மற்றும் வழக்கறிஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என சிலாங்கூர் காவல் துறை தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் கூறினார். அவர்கள் இருவரும் 10,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அடுத்த புதன்கிழமை (டிசம்பர் 12) நிறுத்தப்படுவர் என அவர் மேலும் கூறினார்.
இதுவரையிலும், 99 சந்தேக நபர்கள் இக்கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 பேர்களை காவல் துறை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.