Home நாடு தே.முன்னணி தலைவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு

தே.முன்னணி தலைவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு

1007
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகா உதவித் தலைவர், சி. சிவராஜா நேற்று நாடாளுமன்ற மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக, இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்துப் பேசிய தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் அமிடி, நேற்று நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர், முகமட் அரிப் முகமட் யூசோப், சிவராஜாவை மக்களவையின் உள்ளே அனுமதிக்காததன் எதிரொலியாகவே இவர்களின் இச்செயல் அமைகிறது என்றார்.

தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் சம்பந்தப்பட்டவர் 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் மட்டுமே, எந்த ஒரு முடிவும் எடுக்க முடியும் என சாஹிட் குறிப்பிட்டார். இதற்கிடையே, இக்குற்றச்சாட்டு குறித்து சிவராஜா மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியிருப்பது  குறிப்பிடத்தக்கது.